Read More
பொது நலவாய நாடுகளின் சட்ட மறுசீரமைப்புக்காக சட்ட மறுசீரமைப்பு ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு 60 ஆம் தசாப்தத்தில் அந் நாடுகளின் விடா முயற்சியுடன் 1969 ஆம் ஆண்டில் இலங்கையின் சட்ட ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. தற்போதிருப்பது இலங்கையின் ஒன்பதாம் சட்ட ஆணைக்குழுவாகும். மாண்புமிகு உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நாட்டில் புகழ்பெற்ற குடியியல், குற்றவியல், வர்த்தக ஆகிய பல்வேறு சட்டத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞான ரீதியான மற்றும், தொழில் ரீததியான தகைமைகளைக் கொண்ட சட்டத்தரணிகள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளை இலங்கையின் சட்ட ஆணைக்குழு கொண்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சட்ட ஆணைக்குழுச் சட்டத்தின் 02 பிரிவின் படி, தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலப்பகுதிக்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுகின்றனர்.